பட்டியல்
ஐம்பது ரூபாய்க்கு,
ஐந்து நிமிடம்..
இருபத்தைந்து ரூபாய்க்கு,
அரைமணி நேரம்..
பத்து ரூபாய்க்கு,
ஒரு மணிநேரம்..
அதுவும் இல்லாதவர்கள்...
காத்திருக்க வேண்டும் கடைசிவரை..!!
குழப்பம் வேண்டாம்...
இவை கோவில்களில் தொங்கும்
சிறப்பு தரிசனப் பட்டியல் பலகை.
ஏழையின் சிரிப்பில்
இறைவனைப் பார், என்பது போய்...
ஏழையாய் இருந்தால்,
இறைவனை கொஞ்சம் மெதுவாய் பார்
என்கிறது இந்தப் பட்டியல்.
பட்டியலிடும் பெருந்தகையர் அனைவரையும்
இறைவன் அருளட்டும்...!!!