+பந்து பேசியதால் விளையாட்டாய் ஒரு துளிப்பா+
எவ்வளவு அடி வாங்கினாலும்
திரும்ப திரும்ப அடிப்பர் என்னை
கிரிக்கெட்!
*=====*=====*=====*=====*
உதை கொடுத்தும் பொறுக்காமல்
வெளியே ஒடினாலும் விடமாட்டர் என்னை
கால்பந்து!
*=====*=====*=====*=====*
கூடைக்கு போகச்சொல்லி
தரையில் அடித்து அடித்து சொல்வர் என்னை
கூடைப்பந்து!
*=====*=====*=====*=====*
இருவரோ நால்வரோ
இறுதிவரை ஓயாமல் அடிப்பர் என்னை
டென்னிஸ்!
*=====*=====*=====*=====*
சிறிய இடத்திற்குள்
ஈவிரக்கமின்றி போட்டுத்தாக்குவர் என்னை
டேபில் டென்னிஸ்!
*=====*=====*=====*=====*
சுவற்றில் அடித்து அடித்து
உடம்பு வீங்க வைப்பர் என்னை
ஸ்குவாஷ்!
*=====*=====*=====*=====*
தூரத்திலே இருக்கும் இடம் போகச்சொல்லி
வெளுவெளுவென வெளுப்பர் சிறுவனாகிய என்னை
கோல்ப்!
*=====*=====*=====*=====*
எல்லோரும் நல்லா விளையாடுங்க
ஆனா என் வாழ்க்கையோட விளையாடாதீங்க
சோகமாய் பந்து...!!!
*=====*=====*=====*=====*