நீ வருவாய் என நான் நினைத்தேன்

என் அன்புக்கு பாத்திரபட்டவளே...
என் நெஞ்சினிலே நீ பதிந்துவிட்டாயடி என் கண்ணே
உன்னை நினைத்து நான் உறங்காத நாட்கள் பலவன்று
நீ என் கண் முன்னே நடந்து செல்கின்ற பொழுது
உன் கூந்தல் அசைவு கண்டு என் உள்ளம் தடுமாற
நான் உன்னை ஒரு நாளும் நினைக்காத நாட்கள் இல்லை என் கண்ணே...
நான் உறங்குகின்ற வேளையிலே என் நெஞ்சம் தொட்டு
நீ வருடயிலே...
என் உள்ளம் இன்ப களிப்புற்று நான் உன்னை நினைத்து
நீ திலகமிட்டு என்னை நீ பார்க்க உன்னை நான் பார்க்க
யாழை நான் மீட்கின்றேன் என் மனதில்....
நீ எங்கிருந்து பெற்றாய் இவ்வளவு அழகை என் காதலி...
பூலோக அழகி ரம்பைக்கு நிகரானவளே என் கண்ணே...
என் உயிர் நீயே... என் உடல் நீயே ...
எப்பொழுது நீ வருவாய் என நான் நினைத்து
உன் விழி ஓரம் நான் காத்து கிடக்கின்றேன் என் காதலி.....

எழுதியவர் : ரஜினிகாந்த்.E (21-May-14, 12:24 pm)
பார்வை : 207

மேலே