விதி செய்யும் கோலம்

வேலு வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.நீண்ட நாட்களாக ஊரில் மழை இல்லாததால் பூமி வரண்டு கனம் வெடித்துப் போய் கிடந்தது.புற்கள் கருகி மஞ்சள் நிறமாகி அழகற்றுப்போய் கிடந்தது.அந்த நிலத்தையே நம்பி வாழும் விவசாயக் குடும்பங்களில் வேலுவின் குடும்பமும் ஒன்று.
வானம் வௌத்துப்போய் மழைக்கான எந்தவித அறிகுறுயையும் காணாது நம்பிக்கை இழந்தவனாக தனது குடும்பத்தின் எதிர்காலத்தை நினைத்துக் கொண்டான்.பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளுக்கான படிப்புச் செலவு மற்றும் வேறு செலவுகளுக்கெல்லாம் இந்த விவசாயத்தையே நம்பியிருந்தான் வேலு.மழை பொய்த்தால் என்ன செய்வது என்று சிந்தித்வனாக முற்றத்தில் கிடந்த கயிற்றுக்கட்டிலில் அமர்ந்தான்.மனைவி வேலம்மா கொடுத்த தேநீரை மனமின்றிக் குடித்தபடி இருந்த வேலுவிடம் மனைவி வேலம்மா,இஞ்சருங்கோ வெல்லன்ன அன்னாவியார் வந்து போனவர்.கடன் தந்து நீண்ட நாளாயிட்டுதாம் கெதியா தந்து முடிக்கட்டாம் என்று சூடாக் கதச்சிட்டுப் போனவர். கெதியாக் கொடுக்கப் பாருங்கோ மனிசன் ஒரு மாதிரி மானத்தப் போக்காட்டிப் போட்டுடுவான்.என்று தாழ்ந்த குரலில் கூறினாள்.
என்ன வேலம்மா கதைக்கிற வெச்சிட்டா கொடுக்கமாட்டன் என்று சொல்றன்.விளைச்சல் அமைஞ்சிட்டா இதல்லாம் பெரிய காசா? என்று சொன்னவனாக வானத்தை ஒரு முறை அன்னார்ந்து பார்த்துக் கொண்டான்.அந்த வேளை வேலுவின் நண்பன் முருகேஸ் ,என்ன ரண்டு பேரும் யோசனையில் இருகிறியல் ஏதும் பிரச்சினையா என்று கேட்டவாறு வந்தான்.
ஒன்றுமில்லை முருகேசு பயிர் செய்ற நேரத்துல மழையைக்காணம் அதுதான்.உனக்கென்ன ஒன்ற தொழில் சும்மா ஜோரா போவுது உனக்கு கஸ்டமில்லை என்றவனிடம் நீ வேற வானத்தப் பாக்கக்க பயமாயிருக்கு இன்று வருமோ நாளை வருமோ என்று.மழை வந்தா வெட்டிய செங்களெல்லாம் நனைஞ்சி கரைஞ்சி பொயிடும்.அத நம்பித்தானே என்ற குடும்பமும் வாழுது.இதை வெச்சித்தான் கடன் தனிசெல்லாம் ஒப்பேத்தனும்.இன்னும் இரண்டு மாதத்துக்கு மழை பெய்யாட்டி என்ற பிரச்சினையெல்லாம் ஓரளவு நிரைவேத்திப்போடுவன்.என்று தன்னை மற்றுமே சிந்தித்தவனாக கதைத்துக் கொண்டிருப்பதைக் கேட்டு வேலுவும் வேலம்மாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
மழை கிடைத்தால் தன் வாழ்வு சிறக்கும் மழை பொய்த்தால் முருகேசின் வாழ்வு சிறக்கும் விதியை நினைத்து வேலு சிரித்துக் கொண்டே அழுதுகொண்டிருந்தான்.

எழுதியவர் : ஜவ்ஹர் (23-May-14, 10:25 pm)
Tanglish : vidhi seiyum kolam
பார்வை : 244

மேலே