தாய் மடி உறக்கம் மண்ணில் அது மனிதரின் சொர்க்கம்

அன்னையின் மடியினில் சாய்ந்துகொண்டே -என்
ஆயுள் முடிந்திட வேண்டும் ...
இன்னொரு பிறவி உண்டு என்றால் -அவள்
மடியிலே தவழ்ந்திட வேண்டும் ...
பிள்ளைகள் எத்தனை பெற்றாலும் -அவள்
செல்லமாய் நான் இருந்திட வேண்டும் ....
அவள் முகத்தினில் புன்னகை பூக்கச்செய்ய -சிறு
குறும்புகள் செய்திட வேண்டும் ..
அவள் அருகில் இருந்தால் போதுமென்பேன் -அந்த கடவுள்களெல்லாம் அவள் காலடியில் .....