முதல் எனும் மூன்றெழுத்து

​முதல் எனும் மூன்றெழுத்தே
வாழ்வு எனும் மூன்றெழுத்தில்
வருமா எனும் ​மூன்றெழுத்தாகி
கேள்வி எனும் மூன்றெழுத்தாய்
மனம் எனும் மூன்றெழுத்தில்
எழும் எனும் மூன்றெழுத்தானால்
விளைவு எனும் மூன்றெழுத்தாகி
கவலை எனும் மூன்றெழுத்து
சூழும் எனும் மூன்றேழுத்தாகி
தோல்வி எனும் மூன்றெழுத்து
பயம் எனும் மூன்றெழுத்தாய்
வருமே எனும் மூன்றெழுத்து !

வாழ்வு எனும் மூன்றெழுத்தில்
ஏதுமே எனும் மூன்றெழுத்து
உறுதி எனும் மூன்றெழுத்து
இறுதி எனும் மூன்றெழுத்து
இவண் எனும் மூன்றெழுத்து
நிலையே எனும் மூன்றெழுத்தே
இல்லை எனும் மூன்றெழுத்தால்
கொள்க எனும் மூன்றெழுத்தை
கன்னி எனும் மூன்றெழுத்தே
முடிவு எனும் மூன்றெழுத்தாகி
இல்லை எனும் மூன்றேழுத்தாய்
கொள்க எனும் மூன்றெழுத்தை !


( இவண் = இவ்விடம் )
( கன்னி = முதன்முறை )

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (25-May-14, 9:24 am)
பார்வை : 161

மேலே