ஆவாரம் பூ
கதிரவனின் தாகம் தீர்க்கும்
காற்றாட்டின் ஓரத்தில்
வாத்துகளும், நீர்ப்பறவைகளும்
வாழும் அவ்விடத்தில்
காற்றில் சலசலக்கும்
மூங்கில் காடுகளின் நடுவினில்
கடிதாய் வாயில்களும்
மெலிதாய் கூரைகளும்
வேய்ந்ததிந்த குடிலிற்குள்
விதியின் விளையாட்டில்
விதவையான, காத்தாயி
வீட்டினுள் அவளின்
வயிற்றினுள் குறைமாதத்திலே
தாயாரின் உயிர் குடிக்க தயாராய்
வெண்பனி மாதத்தில் வெளிவந்த
அக்குழந்தை ஆயாகையில்
அழுகையோடு அழகாய் பிறந்தாள்
ஆவாரம் பூ என்ற பெயரால்
அவளும் அழைக்கப்பட்டால்.
தாயை பிரிந்த சேயின்
பசியை போக்கிட
பசுவும் இங்கே தன்
பாலை வார்த்தது, தன் பங்கிற்கு
அவள் வீட்டு ஆடும் அன்போடு
அள்ளித்தந்தது அதன்பாலை...
பாதம் பூமி பட்டதும்
பரவச நிலையொன்று கண்டு
பறவை போலே பறந்து திரிந்தாள்
பார்க்கும் இடமெல்லாம்
புதிதாய் தெரிய பூத்த மலராய்
புன்னகையோடு இருந்தாள்...
அகவை ஐந்து தொட்டது
பாடம் கற்க பள்ளி இல்லை
நல்லறிவு புகட்ட சான்றோர் இல்லை
தானாக வளர்ந்தாள்
தன் நோக்கில் திரிந்தாள்.
காட்டு பூவாய் கானகத்தில்
மணம் வீசினாள்..
வன தேவதையாய் வஞ்சியிவள்
வலம் வந்தாள்...
பறவைகளோடு பறந்தும்
மயிலோடு நடந்தும்
குயிலோடு கூவியும்
விலங்குகளோடு விளையாடியும்
விசித்திரமாக வாழ்ந்தாள்
மனிதர்களை விட
மான்கள் உலாவும்
மூலிகை காடு சொர்க்கமாய்
தெரிந்தது...
அம்புலியின் அழகும்
ஆயாவின் கைப்பிடி சோறும்
இடும்பா என்ற ஆடும்
ஈசல் பூக்கும் வயலும்
உறைந்த பனியும் இவள்
உள்ளம் கவர்ந்தவைகள்....
கவலை ஏதுமின்றி
களித்திருந்த
இவள் வாழ்வினில்
அன்றொரு சம்பவத்தால்
சோகத்தில் மூழ்கினாள்...
-------------------------(தொடரும்)
-PRIYA