வாசகசாலை எ நூலகம்

...''' வாசகசாலை (எ) நூலகம் ""...
அறிவை அடக்கியாளும் அணை
அள்ளிப்பருகவே அழைக்கிறது
வயோதிகர்களும் வாலிபர்களும்
வரிசையாய் அணிவகுத்து வரவே
வாசகசாலை தன் வாசல் திறந்து
வருவோரை அன்பாய் வரவேற்று
பாசை தரும் ஓசைக்கு தடைசெய்து
படிக்கவரும் அறிவுக்கே பச்சிக்கொடி
புரட்டப்படும் புத்தகங்கள்யாவும்
வாழ்வை புரட்டிவிடும் சக்தியுண்டு
இங்கு பலவிதமான ருசிகளில் அறிவு
பலகை சட்டங்களுக்குள் அழகாய்
பந்திவிரித்து வைக்கப்பட்டுள்ளது
பசி தீரும்வரை ருசித்து உண்ணலாம்
எத்துணை உண்டாலும் தீராது பசி
அகத்தின் அழுக்கை அகற்றிவிட்டு
நேர்த்தியாய் நெய்தெடுக்கும் நூல்
அஃதே எனை நூலகம் என்றழைப்பர்
என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...