கலி கால காதல்
வான் முகில் காதலால்
விளைந்தது மழை
மழை மண் காதலால்
விளைந்தது இலை
இலை இரவி காதலால்
விளைந்தது மலர்
மலர் வண்டு காதலால்
விளைந்தது கனி
கனியுண்டு களித்த மனிதனால்
விளைந்தது கலி
கலி கண்ட காதலில் நாம்
எதை கண்டு களித்தோம்
அழிவுக்கு தானே வழி வகுத்தோம் .