கவிதைகள்

காலங்கள் பல
கவிதைகளை படைக்கிறது

அழ தொடங்கும் முன்
அணைத்து கொள்ளும்
அன்னை

ஆசைகளை சொல்லாத
போதே செய்து கொடுக்கும்
தந்தை

தவறுகளை விடைத்தாளில்
மட்டும் இன்றி நடை
உடைகளிலும் திருத்தும்
ஆசான்

முகத்திலும் அகத்திலும்
ஒன்று போல் இருக்கும்
நட்பு

வெகு விரைவில் மற்றுமொரு
அன்னையாய் மாறும்
துணைவி

ஓய்ந்திருக்கையில்
உத்தாசை செய்யும்
பிள்ளை

இன்னும் பல
கால கவிஞனின்
கவிதைகள்

புரிந்து கொள்வதில் தான்
இவற்றின் அருமைகள்

எழுதியவர் : கவியரசன் (27-May-14, 8:12 pm)
Tanglish : kavidaigal
பார்வை : 81

மேலே