விடியல் நோக்கி
நாம் எங்கே
நகர்கிறோம்
உற்சாகம்
இழந்தவர்களாக!
இழப்புக்கள்
இதயம் கிழிக்கிறதுதான்
ஆனாலும்
மருந்து
தடவிய வண்ணம்
மறுபடியும்
பயனிக்கலாம் அல்லவா ?
உற்சாகம்
இழந்து விட்டால்
சந்தர்ப்பம் வரும் போது
மீண்டும் கூடும்
உற்சாகமும்
உணர்வுகளும்
நினைவுகளை
இழந்து விட்டால்
இழப்புக்கள் எப்படி
நினைவில் வரும் ?
இழப்புக்களை
இழந்து விட்டாலும்
நினைவுகளை மட்டும்
இழந்து விடாமல் தொடர்வோம்...
தொலைவில் இல்லை
நம் விடியல்.
மிஹிந்தலைஏ.பாரிஸ்

