எதிர்மறை காதல்

உனக்கு ஒரு நற்குணமும் இல்லை
தெரிந்தும் எனக்கு வேறு நற்கதியும் இல்லை
மூக்கின் மேல் வீண்கோபம் கொள்கிறாய்
வாக்கினாலே என்மேல் தீயை உமிழ்கிறாய்
தற்பெருமை பேசுகிறாய் பின் எனது
தற்காப்பு கலைகளுக்கு வேலை வைக்கிறாய்
உனது எனது நண்பர்கள் பாகுபாடில்லாமல்
அவர்கள் முன் எனை மட்டமாய் பேசுகிறாய்
இவ்வளவுக்கும் பின் உன்பின்னால் வர
அவ்வளவுக்கு என்ன கிறுக்கா என கேட்கிறார்கள்
எனக்கு மட்டும் தான் தெரியும் நான்
உன்னைவிட உன்மேல் என் காதலை நேசிக்கிறேன்
எதிர்மறையாக பொய்யும் காதலின் அழகு
அதிரடியாக தோற்பது போல் நடிப்பதும் அழகு
எனது உணர்வுகள் உயிர்பெரும் ஒருநாள்
உனது பேரழகி கர்வத்தை அடக்கிடும் திருநாள்

எழுதியவர் : கார்முகில் (28-May-14, 7:01 pm)
சேர்த்தது : karmugil
Tanglish : ethirmarai kaadhal
பார்வை : 130

மேலே