சில்லறை

பிச்சைக்காரன்
தட்டில் விழும்
முதல் பூ ...

பேருந்து
பயணத்தில்
நடத்துனரின்
பை நிரப்பும்
காகிதப் பூ ...

கல்லறை
செல்லும்
மனிதரை
வழியனுப்பும்
இறுதிப் பூ...

வாடாத பூ
பலரின் வாழ்வை
வாட்டும் பூ
பாலகர்க்கு
விளையாட்டு பூ
பணக்காரர்களின்
தலையாட்டும் பூ

வெற்றி தோல்வியை
நிர்ணயிக்கும் பூ
ஒருவர் சிரிக்கையில்
மற்றொருவரை
அழவைக்கும்
மக்காத பூ ...

இருப்பவன்
வாரி இரைப்பதும்
இல்லாதவன்
வார நினைப்பதும்
எடைக்கு எடை
உடலை விற்கும்
ஒரே பூ சில்லரைபூ ...

எழுதியவர் : கனகரத்தினம் (29-May-14, 1:08 am)
Tanglish : sillarai
பார்வை : 345

மேலே