பெண்ணாகி புவியாகி
" பெண்ணாகி புவியாகி ..!! "
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

மழையெனும் அன்பால்
மனதைத் தொட்டால்
மகிழ்ந்து பூப்பாள்!
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
வியர்வைசிந்தி உழைப்பால்
கலைத்து நின்றால்
உயிரை விளைவிப்பாள்!
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
கண்போல் காத்துநின்றால்
கண்ணியம் போற்றிநின்றால்
புதுஉலகம் அமைப்பாள்!
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
இயல்பை நாசம்செய்தால்
இம்சைகளை தொடர்ந்தால்
பேரலையாகி குதிப்பாள்!
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
பொல்லாதது நடத்தினால்
பொய்பேசி திரிந்தால்
பூகம்பமாகி வெடிப்பாள்!
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
புரிந்துணர்ந்து வாழ்ந்தால்
புதுமைகளை வளர்த்தால்
புத்துணர்வு தருவாள்!
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
விரும்பி நேசித்தால்
வாழ்த்தி இரசித்தால்
வேண்டும் வரங்கொடுபாள்!
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
ஆழ்ந்தகழ்ந்து அறிந்தால்
புவியும் பெண்போலே
ஆயிரம் சுகம்தருவாள்!!