நீதி நின்று வெல்லும்-------அஹமது அலி---------

புருடர்கள் பள்ளியில்
குருடர்கள் கற்ற கல்வியால்
உலகம் ஒளிருமோ.....
//
திருடர்கள் சபையினில்
யோக்கியப் பட்டம் பெறுதல்
மிக்க பாக்கியமாமோ....
//
நெஞ்சுக்கு நீதியென்று
நெஞ்சம் விம்மி அழுதுவிட்டு
வஞ்சகத்தில் வாழ்வதும் வாழ்வாமோ....
//
தோள் கொடுத்த தோழனுக்கு
தேள் கொடுக்கை பரிசளித்த
பாசமதும் பாசமாமோ.....
//
சாதிக்கொரு நீதி சொல்லி
ஆதிக்க ஊளையிடும்
ஊடகங்களும் நான்காம் தூணோ....
///
அனைவரும் சமமென்றால்
அலறித் துடிக்கும் பாவிகளும்
தேச பக்தி மான்களாமோ....
//
எழுதாத சட்டத்திலே
எதேச்சதிகார சப்தத்திலே
சாமானியனை சாகடிப்பதும் தர்மமாமோ....
//
சூதுகளின் மிகையினாலே
சூழ்ச்சிகளும் நிலையாமோ
நீதியும் ஓர் நாள் வெல்லாமல் போமோ...

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (31-May-14, 7:50 am)
பார்வை : 324

மேலே