கடலும் மனிதனும் - ஜவ்ஹர்

கடலது செயலது
வாழ்க்கை சொல்லும்
அமைதியும் சாந்தமும்
அதனில் புரியும்

பொங்கிடும் கடலோ
வாழ்க்கையின் துயரம்
சாந்தமே வாழ்க்கை
கடலின் அமைதி

பொங்கிய கடலோ
உயிரைக் காவும்
வாழ்க்கையின் துயரம்
வாழ்வைப் பறிக்கும்

கடலது அலையது
உழைப்பைச் சொல்லும்
நுரையது மறைவது
செலவை உரைக்கும்

கடநீரது உவர்ப்போ
அழகைச் சொல்லும்
உவர் நீரது சுவையோ
மானம் சொல்லும்

கடற்கரை மணலோ
வெண்மைத் தூய்மை
கடற் சகதியும்
மாசாய் கருமை இழிவு

மனிதனில் தூய்மை
உளத்தின் அழகு
மாசுகள் நிரைந்தது
சிலமனிதர் உளமது

நிலத்தில் கொடுமை
சுனாமியின் வருகை
புண் பட்டார் உள்ளம்
வெகுண்டெழும் விரைவில்

கூடிக் குறைவது
கடநீரின் தன்மை
ஒரு நிலையில்லாதது
மனிதனின் வாழ்க்கை

மனிதன் வாழ்க்கை
கடலைச் சொல்லும்
கடலின் போக்கை
மனிதன் சொல்வான்

எழுதியவர் : ஜவ்ஹர் (31-May-14, 3:57 pm)
பார்வை : 96

மேலே