சித்திரையில் நான் பார்த்த சித்திரமே

சித்திரையில் ஒரு நாள்!

சித்திரமே உன்னை நான் பார்த்தேன்

கண் திரையில் ஓவியமாய் பதித்தேன்

மஞ்சள் நிற சேலையிலே, மாந்தோப்பில் நீ நிற்கையிலே

மங்கை உந்தன் மேனி அழகு, என்னை கொள்ளை கொண்டதே

பார்வையிலே பதிவானாய், எந்தன் பாதையிலே நீ ஒளியானாய்

பாடல்களுக்கு ஸ்வரமானாய், எந்தன் கவிதைகளுக்கு நீ கருத்தானாய்

ஓர் நிலையில எந்தன் மனம் இருப்பதில்லை, நீ எனக்குள்ளே வந்த பின்னே

ஊர், உறவு அருகில் இருந்தாலும் உள்ளம் அதனை அறிவதில்லை, நீ அதனை ஆக்ரமித்திருப்பதினாலே

தேவதையே உன்னை தேடுகின்றேன், ஒரு நாள் முழுக்க காத்து நின்றேன், நீ கண்ணில் படாததினாலே

தென்றல் வீசும் மாலையிலும், எரிகின்றேன் உள்ளத்திலே, தாபம் கொழுந்து விட்டு எரிவதினாலே

மழை பொழியும் வேளையிலும், உடல் நனையும் வேகத்திலும், அனல் குறைவதில்லை, உன் நினைவு என்னை கொல்வதினாலே

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (31-May-14, 3:28 pm)
பார்வை : 63

மேலே