மனைவி அமைவதெல்லாம்

அன்பை சுமந்துகொண்டு
ஆவலோடு சென்றேன்
இதயம் கனத்தது
ஈவிரக்கமில்லாத அவளின் பேச்சால் !
உறக்கமின்றி தவித்தேன்-அவள்
ஊக்கமின்றி பார்த்த பார்வையில்..
என்னதான் செய்வதென்று
ஏக்கத்தோடு சிந்தித்தேன்
ஐயம் கொண்ட என் வாழ்வை
ஒருபோதும் நம்பவில்லை
ஓங்கி ஒலித்த்தேன்
ஔவையின் ஆத்திசூடியை
புரிந்துகொண்டவள்
புன்னகைத்தாள்
முடிந்தது விவாதம்
விடிந்தது விவாகம்
தொடர்ந்தாள் என்னோடு
தொடக்கத்தில் என் மாணவி

எழுதியவர் : வேம்மணி murugesan (31-May-14, 4:49 pm)
பார்வை : 140

மேலே