உழைப்பே மூலதனம்

உழைத்தால் உணவு கிட்டுமடா-தம்பி
உற்றார் உறவினர் சிறந்திடலாம்
கற்றால் நாமும் உயர்ந்திடலாம்-தம்பி
கற்பதனால் அறிவைப் பெருக்கிடலாம்

உழைப்பால் உயர்ந்தோர் ஏராளம்-தம்பி
உழைக்க மறுத்தால் வறுமையடா
இளமை வயதினில் உழைத்துவிடின் –நமக்கு
இன்னலோ ஒருபோதும் இல்லையடா

முறுக்கு ஏறிய இளமையிலே-எளிதாய்
முன்னேறி வேகமாய் புறப்படலாம்
உழைப்பே எமக்கு மூலதனம்-இதை
உணர்ந்தால் வறுமையை விரட்டிடலாம்

பெற்றோர் பளுவைக் குறைத்திடலாம்-அவர்கள்
பெற்ற இன்பத்தை மகிழ்ந்திடலாம்
அன்பையும் அறிவையும் புகுத்திடுவர்-எமக்கு
அன்பே கடவுளென வகுத்திடுவர்

எழுதியவர் : சீர்காழி உ செல்வராஜு (1-Jun-14, 3:25 pm)
பார்வை : 646

மேலே