சீர்காழி செல்வராஜு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சீர்காழி செல்வராஜு
இடம்:  சிங்கப்பூர்
பிறந்த தேதி :  30-Mar-1964
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-May-2014
பார்த்தவர்கள்:  71
புள்ளி:  5

என்னைப் பற்றி...

திறந்த மனதோடு பழகுதல்

என் படைப்புகள்
சீர்காழி செல்வராஜு செய்திகள்
சீர்காழி செல்வராஜு - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jun-2014 3:25 pm

உழைத்தால் உணவு கிட்டுமடா-தம்பி
உற்றார் உறவினர் சிறந்திடலாம்
கற்றால் நாமும் உயர்ந்திடலாம்-தம்பி
கற்பதனால் அறிவைப் பெருக்கிடலாம்

உழைப்பால் உயர்ந்தோர் ஏராளம்-தம்பி
உழைக்க மறுத்தால் வறுமையடா
இளமை வயதினில் உழைத்துவிடின் –நமக்கு
இன்னலோ ஒருபோதும் இல்லையடா

முறுக்கு ஏறிய இளமையிலே-எளிதாய்
முன்னேறி வேகமாய் புறப்படலாம்
உழைப்பே எமக்கு மூலதனம்-இதை
உணர்ந்தால் வறுமையை விரட்டிடலாம்

பெற்றோர் பளுவைக் குறைத்திடலாம்-அவர்கள்
பெற்ற இன்பத்தை மகிழ்ந்திடலாம்
அன்பையும் அறிவையும் புகுத்திடுவர்-எமக்கு
அன்பே கடவுளென வகுத்திடுவர்

மேலும்

உழைப்பின் வலிமையை சொல்லிடும் உன்னத படைப்பு. அருமை. பாராட்டுகள் தோழா 01-Jun-2014 4:10 pm
சீர்காழி செல்வராஜு - படைப்பு (public) அளித்துள்ளார்
25-May-2014 7:45 pm

அமைதியான அலைகளற்ற
அந்திநேர பொழுதினிலே
மெல்ல மெல்ல தெரிகிறாயே
மென்மையான வெண்ணிலவே
சூடான நிலைமாறி
சுகமான பால்நிலவே
உன்னழகோ என்னருமை
உனக்கு எங்கும் ரசிகர்களே…..

ஓய்வெடுக்க அணியணியாய்
ஓகோவென திரண்டிடுவர்
களிப்புடனே ரசிகர்களோ
கடந்தகாலம் பகிர்ந்திடுவர்
எட்டாத தூரத்தில்
கிட்டாத காதலியாய்
மட்டிலா அன்புடனே
மயக்கத்திலே மூழ்கடிப்பாய்

உம்முடனே எம்முன்னோர்
உரைத்ததெல்லாம் சொல் நிலவே.
இறந்தகாலம் நிகழ்காலம்
எதிர்காலம் நீ அறிவாய்.
அத்தனையும் அங்கிருந்தே
அற்புதமாய் நோக்குகிறாய்
நிழல்படம் எடுத்திருப்பாய்
நிறைமதியே! நீ தானே சாட்சி…..

மேலும்

புதைந்து செரிந்த புலநெறி வழக்கங்கள்
புதைபொருள் போல புராணங்கள் பற்பல
பூத்துக் குலுங்கும் சொற்பூக்கள் ஏராளம்
பூஞ்சோலை போன்றதே பைந்தமிழைப் பாரீரோ?

எதுகையும் மோனையும் எழிலாய் மின்னிடும்
எழுத்துகள் யாவையும் எக்காலும் இனித்திடும்
ஆடலாய் பாடலாய் ஆகமங்கள் கமழ்ந்திடும்
ஆலம் விழுதுபோல் அத்தனையும் தோரணங்கள்!

கலையும் சுவையும் இரண்டற கலந்த
கன்னித் தமிழோ கவிநயம் புகட்டிடும்
காப்பியப் படைப்புகள் கண்முன் நிறுத்திடும்
காலத்தால் அழியா கலைச்சொற்கள் பாரீரோ?

எளிதில் புரிந்திடவே எடுத்தாள்வோம் புதுமுறையில்
எங்கெங்கும் மணம்வீச எழுத்துப்பணி செய்திடுவோம்
புலமையோர் ஆக்கங்கள் புதுமை படைத்திடவே

மேலும்

நன்று... 11-May-2014 11:57 am
அருமை வாழ்த்துக்கள் 11-May-2014 11:36 am
சீர்காழி செல்வராஜு - படைப்பு (public) அளித்துள்ளார்
11-May-2014 10:04 am

புதைந்து செரிந்த புலநெறி வழக்கங்கள்
புதைபொருள் போல புராணங்கள் பற்பல
பூத்துக் குலுங்கும் சொற்பூக்கள் ஏராளம்
பூஞ்சோலை போன்றதே பைந்தமிழைப் பாரீரோ?

எதுகையும் மோனையும் எழிலாய் மின்னிடும்
எழுத்துகள் யாவையும் எக்காலும் இனித்திடும்
ஆடலாய் பாடலாய் ஆகமங்கள் கமழ்ந்திடும்
ஆலம் விழுதுபோல் அத்தனையும் தோரணங்கள்!

கலையும் சுவையும் இரண்டற கலந்த
கன்னித் தமிழோ கவிநயம் புகட்டிடும்
காப்பியப் படைப்புகள் கண்முன் நிறுத்திடும்
காலத்தால் அழியா கலைச்சொற்கள் பாரீரோ?

எளிதில் புரிந்திடவே எடுத்தாள்வோம் புதுமுறையில்
எங்கெங்கும் மணம்வீச எழுத்துப்பணி செய்திடுவோம்
புலமையோர் ஆக்கங்கள் புதுமை படைத்திடவே

மேலும்

நன்று... 11-May-2014 11:57 am
அருமை வாழ்த்துக்கள் 11-May-2014 11:36 am

அன்னையின் கருணை அமுதம் போன்றது
அன்பே தாயென வடிவம் பெற்றது
உயிரைக் காத்திடும் பண்பில் உயர்ந்தது
உறவே நிறையென உள்ளம் நிறைந்தது

வாழ்வின் தத்துவம் சொல்லித் தந்தது
வாழ்வே கலையென வகுத்துச் சொன்னது
உணர்வைச் செதுக்கிடும் மகிமை வாய்ந்தது
உழைப்பே உயர்வென ஊக்கம் படைத்தது

பசியில் பகிர்ந்திட கற்றுத் தந்திடும்
பரிவே மூச்சென மலரச் செய்திடும்
இனிய சொற்களைப் பேச வைத்திடும்
இல்லமே கோயிலென உணரச் செய்திடும்

வினாக்கள் பற்பல விடைகள் கிடைத்திடும்
விதியே இன்றி வினோதம் படைத்திடும்
நிழலாய் ஒளியாய் நிலையாய் காத்திடும்
நினைந்தே நெஞ்சம் நிம்மதிப் பெற்றிடும்

கருணை உள்ளம் கண்களில் மின்னிடும்
கண்களில

மேலும்

சீர்காழி செல்வராஜு - படைப்பு (public) அளித்துள்ளார்
07-May-2014 1:37 pm

அன்னையின் கருணை அமுதம் போன்றது
அன்பே தாயென வடிவம் பெற்றது
உயிரைக் காத்திடும் பண்பில் உயர்ந்தது
உறவே நிறையென உள்ளம் நிறைந்தது

வாழ்வின் தத்துவம் சொல்லித் தந்தது
வாழ்வே கலையென வகுத்துச் சொன்னது
உணர்வைச் செதுக்கிடும் மகிமை வாய்ந்தது
உழைப்பே உயர்வென ஊக்கம் படைத்தது

பசியில் பகிர்ந்திட கற்றுத் தந்திடும்
பரிவே மூச்சென மலரச் செய்திடும்
இனிய சொற்களைப் பேச வைத்திடும்
இல்லமே கோயிலென உணரச் செய்திடும்

வினாக்கள் பற்பல விடைகள் கிடைத்திடும்
விதியே இன்றி வினோதம் படைத்திடும்
நிழலாய் ஒளியாய் நிலையாய் காத்திடும்
நினைந்தே நெஞ்சம் நிம்மதிப் பெற்றிடும்

கருணை உள்ளம் கண்களில் மின்னிடும்
கண்களில

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே