தடுமாறும் வயது

இந்த இரவு
அந்தி நிலவு
மெல்லக் காற்று
சின்னத் தூறல்
நனைக்க நீ
நனைய நான்

நட்சத்திர வானம்
நடுவினில் நான்
நீளும் இருள்
மீளும் பகல்
விரலோடு விரல்
வெட்கப்பட நிழல்

ஒற்றை விளக்கு
கற்றை வெளிச்சம்
மெதுவாக நடை
மதுவாக உன் குரல்

மிரட்டும் கண்fh
மிரளும் இதயம்
தவறிய துப்பட்டா
"தடுமாறும் வயது"



மீண்டும் வராத காலத்திலிருந்து மீண்டு வநத வண்ணமிருக்கிறது
நரைகளின் வெண்மையிலிருந்தும்
சுருக்கங்கின் சுவடுகளிலிருந்தும் அதே பால்ய பருவத்துக் காதல் !்

எழுதியவர் : Kumaresan (1-Jun-14, 3:40 pm)
பார்வை : 148

சிறந்த கவிதைகள்

மேலே