நாகரீக நகரம்

எதிர் வீட்டு
இழவை எட்டிப் பார்க்க
நேரமில்லா
நாகரீகமே
நகர வாழ்க்கை.....
=========
முக நூல்
நட்பு ஆயிரத்தை தாண்டியும்
எதிர்வீட்டு நட்பு இல்லா
எகத்தாள வாழ்வே
நகர வாழ்க்கை....
=========
விலாசம் தேடி வரும்
மஞ்சப்பை மனிதர்களுக்கு
கூகுள் மேப்பை காட்டி
மொக்கை போடும்
வேடிக்கை வினோதமே
நகர வாழ்க்கை.....
=========
பணத்தை தண்ணீராக்கி
தண்ணீரை பணமாக்கும்
புரியாத விந்தையே
நகர வாழ்க்கை.....
=======
போட்டு கிழிப்பது பழசு
கிழித்தே போடுவது
நவ நாகரீக
நகரத்தில் புதுசு
=========்

கிராப்புடன் பெண்ணும்
குதிரை வால் கொண்டையுடன் ஆணும்
சகட்டு மேனிக்கு திரிந்து
சகா சேர்த்து அலைவதே
நாகரீக நகரம்
========
ஊருக்குள் பாலம் இருக்கும்
பாலங்களுக்கு அடியில்
ஊர் இருந்தால்
அதுவே நகரம்
=======
கோடிகள் புழங்கும்
செழுமையான ஊரில்
கை இல்லா
கால் இல்லா இடுப்பில்லா
ஆடையுடன்
ஆதாம் ஏவாள்கள்
அலையும் ஈடன் தோட்டமே
நாகரீகம் கொண்ட நகரம்
========
மட்டன் பிரியாணியும்
மனங்கவர் தொலைக்காட்சி
நிகழ்ச்சியும்
வீக் எண்டு பார்ட்டியும்
சம்பிரதாயகிப் போனது
நகர வாழ்க்கை
=========

வாழ்க்கை ஒரு வட்டம்
ம்..கூம்
அது ஒரு செவ்வகம்
லேப் டாப், இ பாட் , ஸ்மார்ட் போஃன்
போன்ற செவ்வகங்களே
சொர்க்கமாக ....

எழுதியவர் : சித்ரா ராஜ் (1-Jun-14, 5:07 pm)
Tanglish : naagareega nakaram
பார்வை : 79

மேலே