சிவப்பினில் சிரித்திடும் பைங்கிளியே
சிவப்பினில் சிரித்திடும் பைங்கிளியே
சிரிப்பினில் கவிநயம், கலை நயம் கண்டேனே
சிறகுகள் இருந்தால் பறந்திடுவேன்
சிட்டு உன்னை தூக்கி, கடல் கடந்து சென்றிடுவேன்
சிறு பிள்ளை போலே நீ பார்க்கையிலே
சிற்றாடை அணிந்து, ஒய்யாரமாய் நடக்கையிலே
சிந்தனைகள் சென்றது நீ செல்லும் இடமே
சிலம்புகள் அழைத்தது என்னை, தன் கூட வரவே
சித்திரமும், உன் முன்னே தாழ்ந்திடுமே
சிற்பங்களும், உந்தன் அழகுக்கு தலை வணங்கிடுமே
சிறை போனது எந்தன் மனது உன்னிடமே
சிலை போன்றது உந்தன் வடிவான அங்க அமைப்பே
சின்ன இடை ஒரே சீராக அசைந்தாட
சிவப்பினில் அலங்காரமாய் நடந்தாய், பைங்கிளியே
சீர் வரிசையாய் என்னையே தருவேனே
சீராட்டி, பாராட்டி, மாலையிட்டு உன்னை மணப்பேனே