தெய்வ மகள்

மகள்!
தீமையொன்றுமறியாத தேவதைக் குவியல்களின்,
ஒருமித்த ஆன்மா....

மகள்!
அன்பென்ற ஆயுதத்தை அழகாகப்பிரயகோகிக்கும்,
புனிதப் போராளி...

மகள்!
எதிர்பாலின வன்மதுன்ங்கள் காமக்கருமங்கள் கடந்த,
அன்பின் அங்கீகாரம்...

மகள்!
ஊருக்குச் சிம்மமாயினும் தந்தையிடம் மழழைமாறா,
முரண்பட்ட மங்கை...

மகள்!
எழுத்தறிவற்ற தந்தையும் படிக்காமல் உணரும்,
ஒரு உயிர்க் கவிதை....

மகள்!
தந்தை இறப்பினும் நினைவுகளால் உயிர்ப்பிக்கும்,
பிரம்மனின் பெண்பால்...

எழுதியவர் : கார்த்திக் (1-Jun-14, 7:25 pm)
பார்வை : 2663

மேலே