பச்ச மட்டை

பச்சை மட்டை இழைச்சி
பக்குவமா அடச்சி
குந்த வச்சி என்ன
ஊரறிய அழைச்சி
சொல்லிப் புட்டாங்க

கூந்தலிலே பூவும் வச்சி
அழகான பொட்டும் வச்சி
ஆடையதை மாத்தித் தச்சி
சாமந்திப் பட்ட எனை
உலகறியச் செய்துட்டாங்க

வெச்ச கண்ணு வாங்காம
என் அழக ரசிச்சவங்க
ரசிச்ச மட்டும் செய்தாங்க
என்னிலை மாத்தாம

அன்று
வித்தியாசம் இல்லாம
சேர்ந்திருந்து விளையாடிப்புட்டம்
அருகருகே இருந்துபுட்டம்
கூச்சமேதும் இல்லாம
சுதந்திரமா இருந்து புட்டம்

சத்தமிட்டு சிரித்தாலும்
கூவித்தான் அழைத்தாலும்
தொட்டுத்தொட்டு பேசினாலும்
யாரும் ஏதும் சொல்லலேயே
இப்ப என்ன வந்ததுங்க

இன்று
அங்கயிங்க போகாதே
ஆம்பிலங்க பேசாத
நேரத்துக்கு வீடு வந்து
அடங்கிப் போய் இருந்திடனும்
என்று பல அறிவுரைகள்

பக்குவமாய் பேச வேணும்
வாய் மூடிச் சிரிக்க வேணும்
தலை குணிந்து நடக்க வெணும்
அழகழகாய் உடுத்த வேணும்
அப்பப்பா எவ்வளவு வேணும்

பச்ச மட்ட சிறை தொடங்கி
கட்டுப்பாடு பல வந்து
ஐம்புலங்கள் அடக்கியிங்கு
அடங்கியே வாழுகிறேன்
கைப்பிடிப்பார் வரும் வரைக்கும்

யார் வருவார் கைபிடிக்க
என் நிலை மாற்றி வைக்க
ஏக்கம் பல வாட்டி வைக்க
ஏங்கியே தவிக்கிறேனே
அவர் யாரோ? யார் எவரோ?

ஜவ்ஹர்

எழுதியவர் : ஜவ்ஹர் (1-Jun-14, 6:16 pm)
Tanglish : paccha mattai
பார்வை : 171

மேலே