காலம் மாறவில்லை மனிதன் மாறிவிட்டான்

கட்டுக் கட்டா
அச்சு அடிச்சு
மூட்டையில கட்டிவச்சு
வண்டி கட்டி மாடபுரம்
கொண்டு சேர்க்கும் மாமா
கூலி எத்தனை ரூபா !!

கருத்தப்புள்ள கண்ணியம்மா
காத்திருமா நான் வாரேன்
வண்டி கட்டி சேர்த்துபுட்டா
காசுபணம் ஏதுமில்லை
நாலு வல்லம்சோளம் புள்ள !!

அந்தகாலம் எல்லாம்
காசு பார்க்கவில்லை
தங்கம் தந்து அரிசிவாங்கும்
அட இந்தக்காலம் போல
ஏய்த்து பிழைக்க வில்லை

வந்தவங்களுக்கு
வயிறார சோறு போட்டு
தாம்பலம் தரித்து
வழியனுப்பும் போது
பிறக்கும் சந்தோசம்

வசதி இருந்தும்
வாசல் கதவை
அடைத்து வைத்து
பார்த்து
பயந்து பழகும் போது
இறக்கும் சந்தோசம்

அடுத்த பேச்சு நமக்குயேனடி
இருக்கும் வரைக்கும்
உழைத்து பிழைப்போம்
வயிறு நிறைய உண்டு மகிழ்வோமே !

எழுதியவர் : கனகரத்தினம் (1-Jun-14, 9:29 pm)
பார்வை : 300

மேலே