இனி அவனும் நடிப்பான்

ஆடம்பரம்
உனக்கான விளம்பரம்
ஒப்பனை
உனை மறைக்கும் திரை
செயற்கை மலிந்து
இயற்கை தொலைந்து
எங்கும் எதிலும்
பூசப்பட்ட வண்ணம்
எண்ணங்கள்
செயற்கையில்
விழுந்தது

ரசிப்பில் செயற்கை
பெயருக்காய்
ஆகா ஓகோ
புன்னகை இதழோடு
நிறுத்திக் கொண்டது
உளம் வெறுமையானது
உணர்வுகள்
நடிப்பில் குளித்து
பாசாங்கு செய்தது

நட்பு பெயருக்காய்
மொழியப்பட்டது
தப்பு தப்பாய்
தெரியவில்லை
நீதி கனத்துக்காய்
விழுந்தது
கோதாய் போன ஏழை
விதையாக முடியவில்லை
செல்லரித்த
சூத்தை ஆனான்

பாசத்துக்கான அழுகை
தொடர் நாடகத்துக் கென்றானது
சிரிப்பு
எள்ளி நகைக்க மட்டும்
மாற்றான் துன்பம்
இவன் ரசிக்க
நிகழ்வானது
அகம் ஒன்று சொல்ல
இவன் முகம் வேறு சொன்னது

பழமொழி பொய்த்தது
இவன் நடிப்பில்
அகத்தின் அழகை
முகம் சொல்லவில்லை
சொன்னது
நடிப்பின் திறனை
ஏமாற்றியது ஏமாளியை
துவன்றான்
துடித்தான்
துணிந்தான் - ஆம்
இனி அவனும் நடிப்பான்
செயற்கையானான்

எழுதியவர் : ஜவ்ஹர் (3-Jun-14, 9:46 pm)
பார்வை : 113

மேலே