சாயுங்கால சாபம்

நானும் cricket fanதான் ஆனால் இந்த ipl போட்டிகளை ஏதோ உயிரே அதில்தான் உள்ளது என்பதைப்போல் ஏனோ பார்க்கமுடியவில்லை!:-/
------------
இருப்பவர் நோட்டிறைத்தால்
இரண்டுக்கு நான்கு!
நேரம் அதிலிறைத்தால்
இடும் நாமம் நன்கு!
காலம் இங்கே குறைந்திருக்க
கணைகள் குறி பார்த்திருக்க
ஏனிந்த அலட்சியம்?
இல்லையா லட்சியம்?
'மணி'க்காக கிரிக்கெட்
நடத்தும் மணிவிழா!
பற்று இதில் எங்கணம் கொண்டாய்?
ஊரால் கொண்டாயோ?
சிலபேரால் கொண்டாயோ?
இனத்தின் வலிகளுக்கு
செவிடான செவிகளில்
இந்த வர்ணனை மட்டும்
தெளிவாக விழுந்ததோ?
நாடகம் நடக்குது
நீயும் அறிவாய்!
நகர்ந்து நடந்திடு
உடனே அறிவாய்!
அவ்வப்போது பார்,
அடிமையாய் பாராதே!
அதையும் அறிந்திடு,
அதனால் அழிந்திடாதே!
கால விரயம்
காலனின் விஜயம்!
கடமைகள் உணர்,
இடர்களைத் தகர்,
இனியேனும் தோழா
தவறுகள் தவிர்!
இனியெங்கும் தேடினும்
உனக்கு யார் நிகர்!