மகளிர் தின நல் வாழ்த்துக்கள் !

நதியும் பெண்ணாய்
நாடும் தாயாய்
நிலவும் குமரியாய்
நீல்கடலும் அவளாய்

மொழிகளில் நீயாய்
முப்பெரும் தேவியாய்
பூக்களுக்கும் பெயராய்
பூமியும் இவளாய்

மகளிர் தினம் மட்டுமல்ல
மானுடம் உள்ளமட்டும்
வாழ்த்துகின்றோம் பெண்ணே உன்னை!
வாழ்த்துகின்றோம் முன்னே உன்னை!






எழுதியவர் : . ' .கவி (8-Mar-11, 10:19 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 4261

மேலே