பெண்ணினமே

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே
என்று கூறிடும் சமூகமே பெண்ணை நீ முதல்
அழிக்காதே பெண்ணை
அரவணைத்துக்கொள் முதலில் .......

பெண்ணை கொடுமைப்படுத்துவது ஆண் என்று
கூறும் பெண்ணினமே முதல் நீ பெண்ணை மதி
எங்கேயாவது மாமனார் கொடுமை உண்டா
மாமியார் கொடுமை தானே நடக்குது ..........

பெற்றோரே உங்கள் பெண்ணுக்கு மண(மன)மகன்
தேடுங்கள் பணமகன் தேடி கெளரவத்துக்காக
புதைக்காதீர் பெண்ணவள் வாழ்வை ........

பெண்ணே உனக்கு ஒன்று சொல்கிறேன்
உன்மனம் போல் வாழ் ......முடியலையா
கன்னியாய் வாழ் .......காமத்துக்கும்
பணத்துக்கும் உன்னை கொடுக்காதே
அன்புக்கும் அரவணைப்பிற்கும்
உன்னை கொடு ...........

எழுதியவர் : v.m.j.gowsi (8-Mar-11, 10:29 am)
பார்வை : 707

மேலே