மகளிர் தினச் செய்தி

பெண்ணே நீ கேட்டுகொள்
பெரிதாக ஒன்றுமில்லை காதில் போட்டுகொள்
பாப்பா என்பர் பால் நிலவழகு என்பர் அது
பாசம் இல்லையடி பசப்பு வார்த்தையடி
கரியை கண்ணில் பூசி
கண் மையாக்கிவிடுவர்
கடைசியில் பாத்திரத்தில்
கரியினை கழுவ விடுவர்
முடிகளை வளர்க்கவிட்டு
முழுவதும் சிக்கலுக்கு வித்திடுவர்
முடிவின்றி நீ திருத்தி
முயற்சிக்காமல் நரையாவாய்
செடிகளில் பூக்களுண்டு
சீவுவதற்க்கு நீயுண்டு
சிந்தையில் கட்டுண்டு
சிரிப்பதில்தான் முற்களுண்டு
காலில் கொலுசு மாட்டி
கண்ணகியாய் இருக்க செய்வார்
காலம் முழுக்க கோவலனாய் இருப்பதற்கோ
கயமைத்தனத்தில் இதை செய்தார்
வளையலாய் சிறுவட்டம்
வலக்கையில் இடக்கையில் போட்டுவிட்டார்
வாழ்க்கையில் எதுவட்டம்
வரமாட்டாய் நீ கேள்வி கேட்க
தோடு இரண்டு போட்டுவிட்டார்
தொலையாமல் நீ காப்பாய்
தூங்கபோகவும் உன் கனவில்
துரத்தி வந்திடுவார் கவனம் சிதறாமல்
மூக்குத்தி போட்டுவிடுவார்
முகம்முன்னே நகை ஆசையாய்
மூக்கு சிந்தியே அழுதிருப்பாய்
முட்டாள் இரத்தமும் கண்ணீராய் வருமே
காதலிக்க சுற்றிவருவார் கற்பனையில் மண முடிப்பார்
கற்பை மட்டும் ருசிகண்டு
கவலையின்றி கைவிடுவார் கொடுமையடி
கொஞ்ச கிராமில் தாலிகட்டி
கொள்ளையடிக்கவே நகையை பூட்டி
குடும்பத்தில் சேர்ப்பதுகூட
குழந்தை பெறும் இயந்திரமடி
ஆனாலும் ஆண் குழந்தை
அதற்கில்லை கர்ப்ப பை தாயாக மறுக்கவில்லை
தலை குனிகிறேன் இந்நாளில்
தவறி நடந்தாலும் திருத்திவிடுகிறேன்