இவன் தான் நண்பன்
சேலம் மாநகரில் அம்மாபேட்டையில் ராமும் அக்பரும் நெருங்கிய தோழர்கள். அங்குள்ள பள்ளியில் இருவரும் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தனர்.
அன்று சேலம் மாநகரே மழையில் நனைந்து கொண்டிருந்தது. இரவு பத்து மணியளவில் ராம் வீட்டு காலிங் பெல் அலறியது.
படிப்பதை விட்டு தொலைகாட்சியில் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தியிருந்த ராம், இருக்கையில் இருந்து எழுந்து கதவை திறக்க சென்றான். திறக்கும் முன் சன்னல் வழியாக வந்திருப்பது யார் என உறுதி செய்து கதவை திறந்தான்.
அக்பர் மழையில் முழுவதும் நனைந்து
ஆடி கொண்டியிருந்தான்.
"அக்பர்... ஏண்டா இந்த நேரத்திலே ...அதுவும்
மழையில் நனைந்து கொண்டு..."
"ராம்.. வேறு ஒன்றுமில்லை.. நாளை தேர்வுக்கு
படித்து கொண்டியிருந்தேன்.. திடீரென ஒரு
சந்தேகம் எழுந்தது...உன் ஞாபகம் வந்தது.
நடந்தே வந்தேன்.. இடையில் மழை...மாட்டிகொண்டேன்."
"சரி..சரி.. சீக்கிரம் உள்ளே வந்து தலையை
துவர்த்து.. ஜலதோஷம் பிடித்து கொள்ள போகிறது.", என்று சொல்லி கொண்டே டவ்வல்
எடுத்து கொடுத்தான்.
இருவரும் டிவி பார்த்து கொண்டே படித்து
கொண்டே இருந்தனர். "அக்பர். நாளை காலை
வீட்டுக்கு செல்லலாம். இன்று இரவு என்னோடு
தங்கி விடு. அம்மாவிடம் தெரிவித்து விடு.."
அரை மணி நேரத்தில் மழை முழுவதும்
அடங்கி விட்டது.
இருவரும் மொட்டை மாடிக்கு சென்று மழை பெய்து வெளுத்து போயிருந்த வானத்தையும்
முழு நிலவையும் பார்த்து தங்களை மறந்து
பேசி கொண்டிருந்தனர்..
திடீரென்று ராம் விட்டு லேன்ட் லைன் ஒலித்தது...
"அக்பர்..நீ இங்கேயே இரு.. நான் போய் அட்டெண்ட் பண்ணிவிட்டு வருகிறேன்.." என்று சொல்லி கொண்டு வீட்டிற்குள் நுழைந்ததன்.
ரிசிவரை கையில் எடுத்து," அலோ... யார் பேசறது.....?"
மறு முனையில் அக்பரின் அம்மா," ராம்....
அக்பர் நம்மையெல்லாம் ஏமாற்றி விட்டு
போயிட்டாண்டா.. இரவு பத்து மணிக்கு லாரி
மோதி ஸ்பாட்டிலே இறந்திட்டான்...அவனோட
பாடி கவர்மெண்ட் ஆஸ்பத்திரியிலே இருக்கு..
போஸ்ட் மார்டம் பண்ணிய பிறகு தான் பாடியை
தருவாங்க.."
ராம் கையிலிருந்து பயத்தில் ரிசிவர் நழுவி
கீழே விழுந்தது.
அப்ப.. இவ்வள நேரம் என்கிட்ட பேசிகிட்டு இருந்த்தது .....
நினைக்க நினைக்க வேர்த்து கொட்டியது.
கதவை சாத்தி விட்டு ஆஸ்பத்திரியை நோக்கி
நடக்கலானான்...