விதியின் விளையாட்டு33
ஷிவானிக்கு இறுதி சமய சடங்குகள் அனைத்தும் பூஜை மூலம் ஜோசியர் முன்னிலையில் நடை பெற்றது. குடும்பத்தார் அனைவரும் கலந்து கொண்டனர் 2வாரம் கழிந்தது......வழக்கம் போல் தன் வேலைகளை செய்ய ஆரம்பித்தனர் அப்பா, அம்மா அலுவலகத்துக்கு கிளம்பினர்.....!
ரிஷானி கல்லூரிக்கு விடுமுறை முடிய இன்னும் இரண்டு நாட்கள் உள்ளன எனவே ரிஷானியை மனோஜ் வீட்டில் விட்டு விட்டு பெற்றோர் கிளம்பினர்.
அங்கு சென்ற ரிஷானியால் நிம்மதியாக இருக்க முடியவில்லை ஷிவானி நினைவு வந்து வாட்டிக்கொண்டே இருந்தது......
இதை உணர்ந்த மனோஜின் தாயார் ரிஷானி இங்கிருக்க உனக்கு போரடிக்கும் பின் பக்கம் தோட்டத்துடன் கூடிய வயல் பகுதி உள்ளது போய் சுற்றி பாரம்மா என்று அனுப்பி வைத்தாள்.....
சரி அத்தை என்றவள் பின்புறம் சென்றாள்.
அங்கு தோட்டத்தில் ஷிவானிக்கு பிடித்த அத்தனை செடி வகைகளும் பூக்களும் புத்துக்குலுங்கி கொண்டிருப்பதை பார்த்ததும் அதிசயமாய் பார்த்தாள் ரிஷானி....!
பின்புறம் வந்த மனோஜின் தாய் என்னமா அப்டி அதிசயமாய் பார்க்கிறாய் எல்லாம் ஷிவானிக்கு பிடித்தவைதான் என் மகன் அவளுக்காக தேடி புடிச்சி வாங்கிய அழிக்க முடியாத நினைவுகள் என்று சொல்லி மனோஜின் அம்மாவும் அழுதாள்..........
அத்தே அழாதிங்க என்று ஆறுதல் படுத்தினாள் ரிஷானி!!
சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டிருந்தாள் ரிஷானி அப்பொழுது ஒரு பக்கம் மிக பெரிய அளவில் ஒரு படம் வரைந்து அழகாய் மாட்டப்பட்டிருந்தது.
ஷிவானி ஒரு உஞ்சலில் உட்கார்ந்து அழகாய் சிரித்து கொண்டிருப்பது போன்ற படம் உண்மை மாதிரியே வரையப்பட்டிருந்தது சுற்றி பூக்களுமாய் தேவதை மாதிரி அலங்கரிக்கப்பட்டிருந்தது அந்த படத்தில் அதைப்பார்த்ததும் இவளுக்கு மனதில் ஒன்று தோன்றியது..........
தன் அக்காவின் மீது எவ்வளவு பாசம் வைத்துள்ளார் அத்தான் பாவம் அவர் தலை விதி இப்படி ஆகிவிட்டதே என்ன செய்வது என்று மனதிற்குள் குமுறினாள் ரிஷானி....!
அப்படியே யோசனையில் நின்றவள் அத்தை அழைக்கவே உள்ளே சென்றாள்.
மதன் வீட்டில் கல்யாண பேச்சு நடைபெற்றுக்கொண்டிருந்தது......????
தொடரும்.......