நகரத்தார் வீட்டுக் கல்யாணம் - 3

சீர்வரிசை

காலைப் பலகாரமே வயிறு முழுதும் நிரம்பி இருக்க,மதியச் சாப்பாடு தள்ளிப் போடலாம், என்றால் சாப்பாடுப் பந்தி காலை பத்தரைக்கே ஆரம்பித்தாகி விட்டது, என்றார் பெண் வீட்டு உறவினர் ஒருவர் .

இடைப் பட்ட நேரத்தில் நண்பர்,
சீர் வரிசை சாமான்கள் பரப்பியுள்ளதை
பார்துவாருங்கள் என்றார்.

சீர்வரிசை சாமான்களும் அருகே ஒரு
வீட்டில் பரப்பியிருந்தார்கள் .

சாமான்கள் பார்பதற்கு முன் அந்த வீட்டைப்
பற்றி சில குறிப்புக்கள் சொல்ல வேண்டும்.

ஐந்து படிகள் கொண்ட உயரமான வீடு.

அரங்கங்கள் வரிசையாய் அமைத்த மாதிரியாக
நீண்டு கொண்டே போகிறது வீடு.

தரையில் இத்தாலிய நாட்டு
மொசைக் பதித்த கற்கள் ,

அலமாறிகள் எல்லாம் பெல்சிய நாட்டுக் கண்ணாடிகள்,

இங்கிலாந்து நாட்டு மோஸ்தர் விளக்குகள்

பர்மிய நாட்டு தேக்கு மரத்தால் கடைந்து
வேலைபாடுகள் செய்யப்பட்ட கதவுகளும் சன்னல்களும்.

நிலைகதவின் உயரம் ஏழு அடி. கனமோ ஒரு அடி. அதன் சாவியின் நீளமோ ஒன்றறை அடி.

எதைச் சொல்வது ,எதை விடுவது என்று தெரியவில்லை.

சீர்வரிசைக்கு வருகிறேன்

கண்ணாடிச் சாமான்கள், மரச் சாமான்கள்,

இரண்டு அடி உயரத்திலிருந்து
எட்டு அடி உயரம் வரை மர அலமாரிகள்,

மெத்தைகள் - 21 ,தலையணைகள் -42,
மெத்தை விரிப்புக்கள் , ஜன்னல் திரைகள் .

31 அடுக்கு பித்தளைச் சாமான்கள்-
சிறிதிலிருந்து,பெரிது வரை (ஒரு அடுக்கு என்பது ஐந்து பாத்திரங்கள் ஒன்றுக்குள் ஒன்றாக இருப்பது.)

மங்குச் சாமான்கள், இரும்புச் சாமான்கள்,

வெள்ளிச் சாமான்கள், தங்க உருப்படிகள், வைர நகைகள் - இவையெல்லாம்

ஒரு பெண்ணுக்கு கல்யாணத்தில் சீராகக் கொடுப்பவை என்றார்கள்.

ஒரு குடும்பத்திற்கா அல்லது ஒரு தலைமுறைக்கா என்று கேட்கப் படவேண்டிய கேள்வி.

இவை போக மாப்பிள்ளை சாமான்கள்,
விதவிதமான பெட்டிகள் ,சட்டைகள் வேஷ்டிகள்,பேனாக்கள்,நவீன எலக்ட்ரோனிக் சாமான்கள்.

சிட்டை நீண்டுகொண்டே போகிறது.

மிகச் சிறப்பான விஷயம்,ஒரு பொருள் விடமால் எல்லாவற்றிலும் விலாசம் பொறிக்கப்பட்டு இருப்பது தான்.

விலாசம் என்றால் தந்தையின் பெயர் நாகப்பன் மகளின் பெயர் மீனாட்சி என்றால் N M என்று பொறிக்கப்பட்டு இருப்பது.

இவையெல்லாம் நான் மேலோட்டமாகப் பார்த்து மேலோட்டமாகச் சொல்லியுள்ள விவரங்கள்.

(நகரத்தார் வீட்டுக் கல்யாணம் - தொடரும்.)

எழுதியவர் : arsm1952 (4-Jun-14, 6:16 pm)
பார்வை : 282

மேலே