சமுதாயத்துக்கு

சமுதாயமே.....
உனது முரட்டு
வரையறைகளை
என் மீது திணிக்காதே.....

என்னால்
எனக்கான
வாழ்க்கையை மட்டுமே
வாழ முடிகிறது.

உன் நியதிகளுக்கு
என்னால்
உடன் பட முடியவில்லை.

வாழ்வதற்காக
உழைப்பவரை விடவும்
கவுரவத்துக்கான
உத்தியோகத்தையே
அரவணைத்து செல்கிறாய்.

பணிந்து கிடக்கும்
மரியாதையை விடவும்
எச்சிலுக்குள் கிடக்கும்
காசைத்தான் நேசிக்கிறாய்.

காசுக்கும்........
காணிக்கும்......
ஆசைப்பட்டு
உறவுகளுக்கான பாதையை
அடைத்து விடுகிறாய்.

விளைவு -

உறவுகளிடையே
விரிசல்
நிர்வாக உத்தியோகம்
செய்கிறது.

உறவுகளைப்
பிரிக்க நினைக்கும்
உன் தந்திரங்களை
இத்தோடு நிறுத்திவிடு.

எச்சரிக்கிறேன்
உன்னை.....

என்னை
நிராயுதபாணி
என்றெண்ணாதே.

என்னிடமும்
ஆயுதங்கள் உண்டு;

ஒன்று
என் மவுனம்.....
மற்றது
என் வார்த்தைகள்......

இப்போது சொல்
நான் என்ன செய்ய வேண்டும்.....
#

எழுதியவர் : செல்வநேசன். (5-Jun-14, 4:23 pm)
பார்வை : 92

மேலே