முகவரி இல்லாத உறைகள்

ஜாதகம் என்ற பெயரில்
திருமணம் ஆகாமல்
காத்திருக்கும் முதிர் கன்னிகள்...

சிறிது நேர இன்பம் வேண்டி
உருவம் தெரியாத இருவருக்கு
பிறந்த அனாதை குழந்தைகள்...

படித்தும் பணம் இல்லாமல்
அரசாங்க வேலையின்றி
திரியும் கல்லூரி தங்க மெடல்
மாணவர் கூட்டம்...

ஜாதகம் பார்த்து
திருமணம் நடந்தும்
ஒரே வீட்டில் பிரிந்து வாழும்
அழகிய தம்பதிகள்...

பாசத்திற்கு ஏங்கும்
வேலைக்கு செல்லும்
பெற்றோர் பெற்ற
பிஞ்சு மழலைகள்.....

எந்த அரசாங்கம் வந்தும்
சாலையோரம் உறங்கும்
வீடில்லா ஏழைகள்...

எத்தனை பாலியல்
கொடுமைகள் நடந்தாலும்
இனியும் ஆண்களை
நம்பி வாழ்க்கையை
தொலைக்கும் நவீன
படித்த மங்கையர்கள்.......

எத்தனை கொடிய நோய்
வந்தாலும் அதை பற்றி
யோசியாமல் சிவப்பு விளக்கு
செல்லும் மனைவியரால்
ஒதுக்க பட்ட கணவர் கூட்டம்.......

ஆங்கில புலமை இன்றி
மெட்ரிக் பள்ளி மாணவர்
நிலைமை இருந்தும் மீண்டும்
அதே பள்ளியில் பணத்தை
கொட்டும் பெற்றோர் கூட்டம்....

மதுவினால் குடும்பம்
நடுத்தெருவுக்கு வந்த
போதும் டாஸ்மாக்கில்
வழியும் குடும்ப தலைவர்கள்....

எத்தனை விபத்து நடந்தாலும்
அதை பற்றி கவலை
கொள்ளாது சாலையில்
பறக்கும் வாகனங்கள்...

எத்தனையோ நிதி நிறுவன
மோசடி நடந்தும் மீண்டும்
மீண்டும் தடம் மாறும்
அறியாத மக்கள் கூட்டம்....

முகவரி இல்லாத உறைகள்.......

எழுதியவர் : ச.கே.murugavel (6-Jun-14, 1:52 pm)
பார்வை : 94

மேலே