உச்சத்தில் நான் எச்சத்தில் நீ

ஒதுங்கி சென்ற என்னை
பதுங்கி பின் தொடர்ந்தாய்
எறும்பாய் ஊறி
மெல்லக் கரைத்தாய்
கல்லான என் இதயத்தை
முன் பின் விளைவுகளை
எடுத்து சொன்னேன்
எதையும் எதிர் கொள்வேன்
தேவதை உன் கரம் பிடிக்க
என்று உருகினாய் மருகினாய்
மோகத்தை தூண்டினாய்
தேகத்தைத் தீண்டினாய்
ஏழாம் அறிவு
எச்சரிக்க
விலகியே விரதம் கொண்டேன்
காதலோடு
கனவுகள் வளர்த்தேன்
விஷயம் கசிந்து
வீட்டிற்கு தெரிந்தபோது
வாய் பொத்தி நின்றாயே....
கோழையே உன் வீரத்தை
பேழையில் வைத்தாயா
நான் ஏழை என்பதினால்
ஆயினும் என்ன
நான் அழுது புலம்பி
தற்கொகைக்கு முயல்வேன்
என்றா எண்ணீனாய்
உன்னோடு வாழ
கனவுகளே சுமந்தேன்
கருவை அல்ல....்
நான் ஏன் வருந்த வேண்டும் ீ
நீயே சிரிக்கும் போது....
தோல்வி எனக்கல்ல ்
கேள்விகள் உனை ஒரு நாள்
வேள்வியில் தள்ளும்
அன்று பார்
நான் உச்சத்தில்
நீ எச்சத்தில்

எழுதியவர் : சித்ரா ராஜ் (7-Jun-14, 8:51 am)
பார்வை : 328

மேலே