சிலை வைத்தால் தான் என்ன
நல்லவர்களை
வாழும் போது தூற்றும் உலகம்
இறந்த பின்பு போற்றும்...
வாய்ப்பு கிடைத்ததால்
கல்லெறியும் கூட்டம்
மாய்த்தப் பின் சிலை வைக்கும்...
அவர் வாழும் போதே
வாழ்த்தி இருந்தால்
கூட கொஞ்ச வருசமாவது
வாழ்ந்திருப்பார் அந்த மனுசர்...
போன பின் சிலை
வைத்தால் தான் என்ன..?
வைக்காவிட்டால் தான் என்ன..?
அவருக்கு தெரியவா போகுது...