தெய்வம் உன்னில்

அரை ஜாண் வயற்றை
நிறைக்க யார் யாரிடோமெல்லாமோ
கை நீட்ட வேண்டி வருகின்றது...!
உலகில் அதிகம் பேருக்கு
இந்த அவலம் தான்...!
குடிக்க பணம் கொடுக்கும் மனசு
ஏழை படிக்க கொடுக்க மறுப்பதேன்..?
கடவுள் உனக்கு பணம்
தந்ததே கொடுக்க தானே தவிர
வட்டிக்கு கொடுக்க அல்ல...
நல்ல மனதோடு உதவி பார்...
வயதான காலத்தில்
அதில் ஒரு நிம்மதி தெரியும்...
இருப்பவன் இருப்பவனுக்கே
கொடுத்தால் அதில் ஏதுதவி..?
இல்லாதவனுக்கு கொடுப்பது
அல்லவா உதவி....
நீ உன்னை மட்டுமே நேசித்தால்
வாழும் போதே சாகின்றாய்...
நீ பிறரை நேசித்தால்
செத்த பின்பும் வாழ்கின்றாய்
அவர்கள் மனதில் என்றும் தெய்வமாய்...
உதவும் உள்ளம் இருந்தால்
மனித உருவில் தெய்வம்
உன்னில் பார்கின்றேன்...
இதை நான் சொன்னால்
பைத்தியக்காரன் என்று
பட்டம் சூட்டும் உலகமடா இது...

எழுதியவர் : (7-Jun-14, 12:21 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
Tanglish : theivam unnil
பார்வை : 64

மேலே