வேண்டும் மனமாற்றம்
Mano Red அவர்கள் படைப்பை படித்ததின் தாக்கம்
இதை என்னை எழுத தூண்டியது
சிவப்பு விளக்கில் மட்டுமல்ல
நமது பக்கத்துக்கு வீட்டில் கூட
சின்ன சின்ன மொட்டுக்கள்
சிரித்து விளையாடும் தளிர்கள்
சிதைக்கப்படுகிறதே
மனிதன் மறைந்து
நரமாமிசம் உண்ணும்
அரக்கர்கள் உலவும்
உலகமகிவிட்டதோ?
எங்கே கோளாறு?
எதில் தகராறு ?
ஒருவனுக்கு ஒருத்தி என
உலகிற்கு உணர்த்திய நாடு
பெண்கள் தெய்வமாய்
மதிக்கப்படும் நாட்டில்
எங்கிருந்து வந்தது
இந்த கேடு கேட்ட தனம்
பெண்களின் மனதை
பார்க்காமல் உடம்பை
மட்டும் பார்த்து
சதை தின்னும் நரிகளாய்,
நாய்களாய் மாறியது ஏனோ?
சட்டங்கள் வந்தென்ன?
சாட்சிகள் வந்தென்ன?
மனமொன்று மாறாதவரை
மாற்றமென்பதில் மாற்றமில்லை