ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

எண்ணை திரி நெருப்பு
கூட்டு முயற்சியே
ஒளி விளக்கு !


உளிக்குப் பயந்து
ஒளிந்து கொள்கின்றன
கற்கள் !

இயந்திரமயமான உலகில்
இன்று மனிதர்களும்
இயந்திரமாய் !

தேடுங்கள் கிடைக்கும் என்றார்கள்
எங்கு தேடியும் கிடைக்கவில்லை
மனிதநேயம் !

தட்டுங்கள் திறக்கும் என்றார்கள்
தட்டினோம் திறக்கவில்லை
உடைத்தோம் உடன் திறந்தது !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (8-Jun-14, 10:20 pm)
பார்வை : 73

மேலே