பேரன் குறள்கள் -15

==============பேரன் குறள்கள்-15========

குயில்முட்டை போலுன்னைக் காப்பகத்துள் இட்டே
பயிலுதல் எக்குடும்பப் பாங்கு?---------------------------------------------141
[பயிலுதல்=நடமாடுதல்]

தம்மோ(டு) இருப்போரைத் தான்தமராய்க் கொள்ளாரைச்
சும்மாடாய்க் கொள்ளல் சுமை!----------------------------------------------142
---[சும்மாடு= தலையில் வைக்கும் சுமையடை]

பொருந்தாமண் ஆகாச் சுவரென்பர்; உண்டு
வருத்துவன ஆகா உணவு!----------------------------------------------------143

உப்பாய் இரு,நீ! உவர்க்கடலாய் மாறாதே!
தப்பு,அதுவும் நீதிருந்தாப் போது!--------------------------------------------144

பரிணமித் தென்ன பயன்,சொல், பயனின்
பரிமாணம் தானுயராப் போது!?----------------------------------------------145

எல்லா உயிரும் இணைதல் விரும்புதே!
செல்வாயோ வேறுவழி சேர்த்து!-------------------------------------------146

உண்பதை எண்ணி உயிர்வாழல் வீண்;இந்த
மண்,உயிர், வாழ்வை மதி!----------------------------------------------------147

காலன் உயிர்களுக்காம் காரணியாம் என்றில்லாச்
சீலமுடன் வாழ்வாய் சிறந்து!------------------------------------------------148

இறைவாக் குணர்வாய்! இறைவாக் கறிவாய்!
இறைசேர்ந் ருக்க எழு!----------------------------------------------------------149

ஆயுதம் கல்வியாய் ஆக்குமா? பேதங்கள்
ஓயுமா? உண்மை எது! --------------------------------------------------------150
================= =================

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (8-Jun-14, 8:23 pm)
பார்வை : 80

மேலே