அவர்களும் மனிதர்களே
துப்புரவுத் தொழிலாளின்
நிலை புரிந்தால்
தெருவினில் உமிழ்வாயோ?
தாயின் பிரசவிக்கும்
வலி அறிந்தால்
பெண்களை
கலங்கம் செய்வாயோ?
உயிருக்காக உதிரம்
தேடுபவனின்
உணர்வுகள் தெரிந்தால்
மதுத் தேடி அலைவாயோ?
அரவாணியின்
மனநிலை
தெரியுமாயின் அவர்களை
ஏளனம் செய்வாயோ?
கந்தல் துணி உடுத்தும்
மனிதனின் அவளம்
புரியுமாயின்
உள்ளாடைத் தெரிய
உடை உடுப்பாயோ?
நீ
உன் பிம்பமாய்
அவர்களை காணாதவரை
அவர்தம் துயர்
அறியமாட்டாய்
மறந்து விடாதே மனிதா
அவர்களும் மனிதர்களே.