வேண்டாம் காதல்

படிக்கின்ற வயதில் காதல் வேண்டாம் – அது
பாழாய்ப் போகத் தீயவழி காட்டுமே
திரைக்காதல் உண்மையென்று நம்ப வேண்டாம் – அது
இல்லாத நடைமுறையை மிகைப் படுத்துமே!
ஊடகத்தில் கெட்டதற்கே முக்கியத்துவம் – அதை
தினம பார்த்தால் உண்மையென்று நம்பத்தோன்றுமே
காட்டக் கூடாத உணமைகளை எல்லாம் – தினம்
காட்டிக் காட்டியே நம்மைக் கெடுத்திடுவார்.
கெட்டதையே பார்த்துநாம் ருசி கண்டுவிட்டால் – இனி
நல்லது எதுவும் நம் கண்ணில் படாது.
நல்லதும் கெட்டதும் கலந்த வாழ்க்கையில் – நாம்
பிரித்தறியும் திறனைத் தான் வளர்த்திட வேண்டும்.
ஊடகக் காதலரை பார்த்துப் பார்த்தே – சிலர்
காதல்வலை வீசிடக் காத்து நிற்பார்
ஏமாந்து அவர் வலையில் சிக்கி விட்டால்- பின்
எவரும் உன்னைக் காப்பாற்ற வரமுடியாது.
தொண்ணூறு சதவீதம் காதல் எல்லாம் – வெறும்
நாடகமாய் அரங்கேறி வாழ்வைக் கெடுக்குது.
எச்சரிக்கை தேவை காதல் செய்வோரே – எதிர்
காலத்தைச் சிக்கலாக்கி நசுங்கிப் போகாதீர்.