உன்னால் தானே நானே வாழ்கிறேன்

மனதில் வரைந்த ஓவியம் ஒன்று
கண்ணீர் மழையில் ஏனோ?
நனைந்த பிறகு உணர்வைத் திறந்து
உயிரை உடைத்த தேனோ?
இது என்ன காதலின் அவஸ்தையா?
உண்மை சொல்லிடு!
உறவின் மடியில் தவழ்ந்தவள் எனக்கு
தனிமை தந்து சென்றாய் .
இரவின் மடியில் நினைவின் கரையில்
புதிய கவிதை தந்தாய்!
இவள் மனம் ஏங்கிடும் ஏக்கங்கள்
மழையாய் விழிகளில் !!!