விதியின் விளையாட்டு36

மனோஜின் அப்பாவிடமிருந்து எந்த பதிலையும் எதிர்பார்க்காத ரிஷானியின் அப்பா ரெடியா இரு காலையில் நான் வந்து உன்னை அழைத்து செல்கிறேன் யாரிடமும் இந்த விஷயத்தை பற்றி இப்போதைக்கு சொல்லவேண்டாம் என்று எச்சரிக்கையுடன் சொல்லி விட்டு ரிஷானியை அழைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார்.......!

கொஞ்சம் புரிந்தும் புரியாதவராய் நின்று கொண்டிருந்தார் மனோஜின் அப்பா???

தன் மனைவியிடமும் இதை பற்றி எதுவும்
பேசாமல் ஆழ்ந்த யோசனையில் மூள்கியவர் அப்படியே தூங்கிவிட்டார்.

சந்துருவின் குடும்பத்தினர் ரிஷானியை திருமணம் செய்து தரமாட்டேன் என்று சொன்னதும் அங்கிருந்து கிளம்பி ஊருக்கு சென்று விட்டனர்...!

வீட்டிற்கு வந்த ரிஷானி சந்துரு குடும்பம் பற்றி தாயாரிடம் கேட்டாள் அவர்கள் கிளம்பி விட்டனர் என்றதும் கொஞ்சம் நிம்மதியடைந்தாள் ரிஷானி.....

மதனிடம் பேச முடியாததால் வேதனையுடன் இருந்தாள் ரிஷானி......கல்லூரி எப்பொழுது திறக்கும் என்ற அந்த நாளுக்காய் காத்துக்கொண்டிருந்தாள்???

மதனின் தங்கை மதனிடம் அவனுக்கு திருமணம் எற்பாடு செய்திருக்கும் தகவலை சொன்னாள் திடுக்கிட்ட மதன் தாயிடம் வந்து என்னம்மா யாரக்கேட்டு என் திருமணத்தை முடிவு செய்திர்கள் என்று கோவமானான்......

யாரை கேட்கணும்டா பொண்ணு வேற யாரும் இல்ல நம்ம உமா தான் என்றதும்.... மதனின் மனது கொஞ்சம் மாறியது உமாவிடம் எப்டியாவது ரிஷானியை பற்றி சொல்லி விடலாம் என்ற முடிவுடன் தாயிடம் பதில் பேசாமல் அங்கிருந்து மறுபடியும் உமாவைப்பார்க்க சென்றான்.....!

உமா தோட்டத்தில் உட்கார்ந்து தன் தோழியுடன் போனில் பேசிக்கொண்டிருந்தாள்....

அவளை இப்பொழுது தொந்தரவு பண்ண வேண்டாம் என நினைத்தவன் கிளம்ப தயாராகும் போது அவளின் பேச்சை கேட்டதும் நின்று விட்டான்.

அவள் மதனை பற்றி போனில் பேசிக்கொண்டிருந்தாள் என் மாமா பையனை திருமணம் செய்து கொள்ள போகிறேன் இந்த நரகத்திலிருந்து விடுதலை ஆகி சொர்க்கத்தில் சேரப்போகிறேன் என்று சந்தோஷமாய் சொன்னதை கேட்டவனுக்கு மனது வலித்தது...

அவளிடம் என்ன சொல்லலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தான்.....!

அதற்குள் வீட்டில் இவர்களை திருமண ஏற்பாடுகள் பயங்கரமாய் பேச்சுவார்த்தை நடக்க ஆரம்பித்தது.

வேறு வழியே இல்லை உடனே உமாவை பார்த்து ரிஷானி விஷயத்தை சொல்லிட வேண்டியதுதான் என முடிவுடன் அவளருகே வந்தான்....!

உன்கிட்ட ஒரு விஷயம் என மதன் தொடங்குவதற்குள்?????

மச்சான் எனக்கு உங்கள ரொம்ப புடிச்சிருக்குதுது எங்க வீட்டுல உள்ளவங்க பணத்தாசையும் சொத்தாசையும் பிடித்தவர்கள்... என்னை அதனால்தான் உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள் ஆனால் எனக்கு அந்த ஆசைகள் எதுவும் இல்லை உங்கள் அன்பு மட்டும் போதும் என்னை உங்களுக்கு பிடித்திருக்கிறதா????என்றாள்...?

மதன் மௌனமானதால்............ இல்லை என்று மட்டும் சொல்லி விடாதிர்கள் உங்களை நான் மனதார விரும்புகிறேன் நீங்கள் இல்லை என்றால் எனக்கு வாழ்விற்கு தொடக்கமே இல்லை உடனே என் வாழ்வை முடித்துக்கொள்வேன் என்று சொல்லிவிட்டு மதனருகில் சென்றாள்???????


விதி தொடரும்.......

எழுதியவர் : ப்ரியா (10-Jun-14, 4:13 pm)
பார்வை : 358

மேலே