உங்கள் அன்பானவர்களிடம் சிறது நேரம் ஒதுக்குங்கள்

அன்றைய வேலையை எல்லாம் முடித்துவிட்டு இரவு 11 மணிக்கு வீடு வந்து சேர்ந்தார் அப்பா...
அவருடைய 5 வயது மகன், அவருக்காக வாசலில் காத்திருந்தான்..
மகன் : அப்பா, உங்ககிட்ட நான் ஒன்னு கேட்கலாமா ?
அப்பா : கேளு..
மகன் : நீங்க ஒரு மணி நேரத்துக்கு எவ்ளோ சம்பாதிப்பீங்க?
அப்பா : அத தெரிஞ்சிக்கிட்டு என்ன பண்ண போற..
மகன் : சொல்லுங்கப்பா..
அப்பா : 100 ரூபாய்
மகன் : அப்போ, எனக்கு ஒரு 50 ரூபாய் தருவீங்களா..
அப்பா : (கோபத்தில்) உன் ரூம்ல போய் தூங்கு..
[மகனும் கோபத்தில் தூங்க சென்றான்]
[கொஞ்ச நேரம் கழித்து தன் தவறை உணர்ந்த தந்தை மகனை பார்க்க செல்கிறார்]
அப்பா : மன்னிச்சிக்கோ.. வேலைல இருந்த கோபத்தை உன் மீது காட்டிவிட்டேன்.. இந்த நீ கேட்ட 50 ரூபாய்...
மகன் : நன்றி அப்பா...
[மகன் தன் தலைகாணியின் அடியில் இருந்த சில ரூபாய்களை எடுத்து]
மகன் : அப்பா, இப்போ என்கிட்டே 100 ரூபாய் இருக்கு, உங்கள நான் ஒரு மணி நேரத்துக்கு வாங்கிக்கிறேன்,.. நாளைக்கு கொஞ்சம் சீக்கிரம் வாங்க,, இரவு சாப்பாட உங்க கூட சேர்ந்து சாப்டனும்'னு ஆசைபடறேன்..
# உங்கள் அன்பானவர்களிடம் சிறது நேரம் ஒதுக்குங்கள், உங்கள் அன்பை பகிர்ந்துகொள்ளுங்கள், வாழ்க்கை மிகவும் அற்புதமானதாகும்..

எழுதியவர் : (10-Jun-14, 1:42 pm)
பார்வை : 184

மேலே