என்னை திரும்பி பார்
ஒரு முறை மட்டும்
என்னை திரும்பி பார்.....
உன் செவ்வரியோடிய விழிகள்
என்னை
விரும்பி பார்க்கிறதா
இல்லை
விருப்பமில்லாத
உன்னை
நான்தான் கட்டாயப்படுத்துகிறேனா
என்று அந்த கரு விழிகளில்
இனம் கண்டு கொண்டு
உன்னை தொல்லை செய்யாமல்
விலகிப்போய்....
எட்டி நின்று
உன் விழி அழகை மட்டும்
ரசித்துக் கொள்கிறேன்...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
