புராதானச் சின்னமாய்

அம்மிக்கல்லும்
ஆட்டுரலும்
புராதானச் சின்னமாய்
அருங்காட்சியகத்தின்
கண்ணாடி பேழைக்குள்
அடைக்கலம் புகும்காலம்
வெகு தூரம் இல்லை.....!

மொழியை மட்டுமின்றி
கருவியையும் மறந்து
குடிப் பெருமை குலைத்த
கூறு கெட்ட இனமோ?
வரலாறு தொலைத்து
வசதியை பெருக்கி ்
உ டல் உழைப்பை தொலைத்து
உடற்பயிற்சி செய்து
என்னப் பயன்?

எழுதியவர் : சித்ரா ராஜ் (11-Jun-14, 10:33 am)
பார்வை : 60

மேலே