மீண்டும் குழந்தையாக ஆசை - தாலாட்டிற்காக

கருவறை முதல் கல்லறை வரை
சுமக்கிறாள்
இவள் என்னை ...

அவள் கண் இமைக்குள்
கரு விழியாய் நான் ஏனோ ...

விடிகிற நாட்களெல்லாம் அவள் குரலில்
தலைசாயும் நேரம் எல்லாம் அவள் மடியில் ..

உன் தூக்கத்திலும் எனை சுமந்தாய் ..
துக்கத்திலும் அழ மறந்தாய் ..

சொந்தங்கள் எல்லாம் நீ சொல்லி தந்தாய் ..
சொல் பேச்சிற்கெல்லாம் என் மகன் என்றாய் ..

மாதங்கள் பத்து உன்னால் பரிசுத்தமானேன் ..
நீ தந்த உயிர் கொண்டு உருவானேன் நானே ..

செல்லமாய் திட்டுவாய் என் பாவி பயன் என்று ..
மற்றவர்கள் சொல்லிவிட்டால் போதும் ..
சொல்லுவாய் என் ராஜாவிற்கு என்ன வென்று ..

எக்குத்தப்பாய் நீ எடுத்த தாலாட்டு ..
இன்னும் என் காதுகளில் ..
ராகமாய் ...ரீங்காரம் ..

காலம் எழுதிய கதையில் ..
இப்போது நீ ஒரு மூலையில் ..
நான் ஒரு மூலையில் ..

நான் வளர்ந்து விட்டேன் ..அது என் பிழையா ??
தெரிந்திரிந்தால் அப்படியே இருந்திருப்பேன் ..
குழந்தையாக ..
தாலாட்டு சொன்ன
என் தாய்மடியோடு .......

#குமார்ஸ் ....

எழுதியவர் : குமார்ஸ் (11-Jun-14, 11:56 pm)
சேர்த்தது : kumars kumaresan
பார்வை : 265

மேலே